Asianet News TamilAsianet News Tamil

அரசுப்பேருந்து மீது லாரி மோதல்.. துடிதுடித்து உயிரிழந்த ஒட்டுநர்.. படுகாயங்களுடன் உயிர் தப்பிய 40 பயணிகள்..!

ஜானகிபுரம் பகுதியில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியில் இருந்து சென்னைக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வளைவில் திரும்பியபோது எதிர்திசையில் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

Truck collides goverment bus in Villupuram... lorry driver killed
Author
Viluppuram, First Published Apr 7, 2022, 12:56 PM IST

விழுப்புரத்தில் அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லாரி - அரசு பேருந்து மோதல்

சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை துறையூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டிச் சென்றார். அதிகாலை விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதியில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியில் இருந்து சென்னைக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வளைவில் திரும்பியபோது எதிர்திசையில் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மீது பயங்கரமாக மோதியது. 

ஓட்டுநர் பலி

இதில், லாரி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிசிடிவி காட்சிகள்

மேலும், விபத்தில் பலியான லாரி ஓட்டுநர் குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து  போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பேருந்து மீது லாரி மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios