Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் மத்தியில் எடப்பாடியாருக்கு கூடிய மவுசு... ஆல் பாஸ் அறிவிப்பிற்கு கொடுத்த வேற லெவல் வரவேற்பு...!

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

Student celebrate CM Edappadi palaniswami all pass announcement
Author
Kallakurichi, First Published Feb 26, 2021, 7:13 PM IST

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட போதும், ஒன்றாம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெருவதாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் பயின்றனர். 

Student celebrate CM Edappadi palaniswami all pass announcement

கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததை அடுத்து பெற்றோர்களிடம் முறையான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ஜனவரி 19ம் தேதி முதல் பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் தேர்வில் முழு கவனம் செலுத்தி வெல்வது சாத்தியமா? என்ற கேள்விகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து எழுந்தன. 

Student celebrate CM Edappadi palaniswami all pass announcement

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்  படி தமிழகம் முழுவதும் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

Student celebrate CM Edappadi palaniswami all pass announcement

இந்த அறிவிப்பு பள்ளி மாணவ, மாணவிகள் இடையே பெரும் மகிழ்ச்சிய ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு பட்டாசு வெடித்தும், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios