Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Srimathi Case.. The friends of the deceased student gave a confidential statement in the court
Author
First Published Aug 23, 2022, 7:02 AM IST

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஜூலை 23-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

Srimathi Case.. The friends of the deceased student gave a confidential statement in the court

,இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

இதையடுத்து மாணவியின் உடல், அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவ்வப்போது ஸ்ரீமதி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் மாணவி ஸ்ரீமதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த நெருங்கிய தோழிகளான 2 மாணவிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போது, இறப்பதற்கு முன்பு ஸ்ரீமதி என்ன மனநிலையில் இருந்தார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்ததா? யாராவது டார்ச்சர் செய்தார்களா? விடுதியில் நடந்த சம்பவம் ஆகியவை குறித்து மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, 2 உடற்கூறு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் நேற்று சீலிடப்பட்ட கவரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சமர்ப்பித்தனர். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

Follow Us:
Download App:
  • android
  • ios