புதுச்சேரியில் பொதுமக்கள் முன்னிலையில் ரவுடிகள் போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜோசப். சமீபத்தில், சிதம்பரம் பெட்ரோல் பங்கில் ஊழியர்களை கத்தியால் வெட்டி பணத்தை பறித்த, அதே ரவுடி ஜோசப் தான். இந்த வழக்கில் கைதாகி வெளிய வந்த ஜோசப், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, கரிக்கலாம்பாக்கம் போலீசார் அவரை தடுத்து விசாரித்ததாக தெரிகிறது. அப்போது போலீசாருக்கும் ஜோசப்பிற்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த ஜோசப்பின் தம்பி அருணாசலம் மற்றும் ரோஸ் அய்யனார் அவரது அண்ணன் சேர்ந்து 2 போலீசாரை கடுமையாக தாக்கினர்.

அவர்கள் தொடர்ந்து தாக்கியதால், போலீசார் உடனே தங்கள் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அவர்களை நடுரோட்டில் போட்டு ரவுடிகள் புரட்டி எடுத்தனர். பலத்த காயமடைந்த போலீசார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தப்பியோடிய ரவுடிகள் ஜோசப், ரோஸ் அய்யனார், அருணாச்சலம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரை புரட்டி எடுத்த எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.