பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தினருக்கு ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தாருக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் என்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எனினும், அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.