6 ஆண்டுகளாக பெண் காவலரை காதலித்து அவரிடம் உல்லாசம் இருந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போலீஸ்காரரை தேடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அருள் (32). இவர் விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் செஞ்சி பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண், சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர்கள் இருவரும் சென்னையில் ஒரே இடத்தில் பணி செய்த போது காதலித்து வந்துள்ளனர். 

கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த இவர்கள், தனியாக வீடு எடுத்தும் குடும்பம் நடத்தி வந்துள்ளதாக கூப்படுகிறது. இந்நிலையில், அருள் விழுப்புரம் ஆயுதபடைக்கு மாறுதலாகி வந்து விட்டார். தற்போது அருள், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக காதலிக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அருள் என்பவர் என்னை 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் சென்னையில் வீடு எடுத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளோம். பல இடங்களுக்கு ஒன்றாகவே சேர்ந்து சென்று வந்துள்ளோம். இது அவருடைய குடும்பத்திற்கும் தெரியும். இந்நிலையில், அருள் இந்த மாதம் வேறுஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். எனவே என்னை ஏமாற்றிய அருள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, அருள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.