பிரேமலதா விஜயகாந்த் - பாஜக தலைவர் முருகன் மீது திருவெண்ணெய் போலீசார் அதிரடி வழக்கு பதிவு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
police case filed premalatha vijayakanth and bjp murugan

உடனடியாக ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை இப்படி செய்து முருகன் மற்றும் கலியபெருமாள் என்ற இருவர் தான் என ஜெயஸ்ரீ மரண வாக்குமூலம் கொடுத்தார். அதையடுத்து கொடூர மனம் படைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

police case filed premalatha vijayakanth and bjp murugan

அதிமுக கட்சியை  சேர்ந்த இவர்களை அந்த கட்சியில் இருந்து உடனடியாக நீக்கினார் முதலமைச்சர். மேலும் 5 லட்சம் உதவி தொகையையும் அறிவித்தார். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் மீதும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மக்களும் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தீ வைத்து எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, ஊரடங்கு உத்தரவையும் மீறி, தே.மு.தி.க கட்சியின் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாஜக தமிழக தலைவர் முருகன் உள்ளிட்ட 40 பேர் திருவெண்ணெய் நல்லூர் பகுதிக்கு சென்றனர்.

police case filed premalatha vijayakanth and bjp murugan

இவர்கள் ஊரடங்கை மீறி கூட்டமாக சென்றதாக, திருவெண்ணெய் நல்லூர் போலீசார் பிரேமலதா விஜயகாந்த், மற்றும் பாஜக தலைவர் முருகன் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios