Asianet News TamilAsianet News Tamil

சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம்… கட்டுக்கட்டாக பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்…

கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 11 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

local body election money siezed
Author
Viluppuram, First Published Sep 22, 2021, 11:37 AM IST

கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 11 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் தங்களின் ஆதரவாளர்களுடன் மேள, தாளம் முழங்க ஆரவாரமாக மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஒன்பது மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட்ம் சின்னசேலம் அருகே கீழ்குப்பம் காவல் நிலைய பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சத்தியநாராயணன் தலைமையிலான தேர்தல் குழுவினர் நேற்றிரவு சோதானியில் ஈடுபட்டனர்.

local body election money siezed

அப்போது, கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு சென்ற காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 11,500 ரூபாய் ரொக்கம், மற்றும் 11 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்ன பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

local body election money siezed

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தில் பறக்குபடை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டன்ர். அப்போது, பயணிகள் பேருந்து ஒன்றி கடத்திச் செல்லப்பட்ட 15 கிலோ சந்தனக் கட்டையை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios