திருமணமாகி 9 மாதங்களே ஆனநிலையில் கணவனின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 9 மாதங்களே ஆனநிலையில் கணவனின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குத் திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், தண்டபாணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மனைவி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தால் பெண்ணின் அலறி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதால் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 9 மாதங்களே ஆனநிலையில் லட்சுமி தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.