Asianet News TamilAsianet News Tamil

திடீரென உதயநிதியின் காரை நோக்கி கைக்குழந்தைகளுடன் ஆவேசமாக பாய்ந்த தம்பதியர்

கள்ளக்குறிச்சி அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

husband and wife strike in udhayanidhi meeting in kallakurichi district
Author
First Published Jul 20, 2023, 11:12 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், லட்சுமி தம்பதிகள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் வீடற்ற நிலையில் கிராமத்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு வீட்டு மனை வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்தனர். இவர்களின் இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின் படி கள்ளக்குறிச்சி வருவாய் துறையினர் இந்த தம்பதிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர்.

வீட்டுமனை பட்டா பெற்ற இவர்கள் எங்களுக்கான வீட்டுமனை எங்கே இருக்கிறது? அதை காட்டுங்கள் என மீண்டும் வருவாய்த்துறையை நாடி கேட்டு வந்த நிலையில், வருவாய் துறையினர் உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்று வெங்கடேசன், லட்சுமி தம்பதிகளுக்கு நேற்று முன்தினம் அரசு இடத்தில் இடம் ஒதுக்கி அதில் கல்நட்டு வழங்கி உள்ளனர். 

4 மாத குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை; அக்கம் பக்கத்தினரால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம் பெண்

ஆனால் இதனை ஏற்காத அக்கம் பக்கத்தினர் வெங்கடேசன், லட்சுமி தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு தராமல் வருவாய்த் துறையினரால் நடப்பட்ட கல் போன்றவற்றை பிடுங்கி எறிந்து விட்டு வெங்கடேசன் லட்சுமி தம்பதி அந்த இடத்திற்கு வரவிடாதபடி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன், லட்சுமி தம்பதியினர் வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில் உலகங்காத்தான் கிராமத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை அளித்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறிய போது அங்கு வந்த வெங்கடேசன், லட்சுமி தம்பதியினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை முற்றுகையிட்டு தங்களுடைய வேதனைகளை அமைச்சரிடம் கூறினார்கள். 

வாணியம்பாடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு மண்டை உடைப்பு

அப்போது இதனை கண்ட காவல்துறையினர் தம்பதிகளை உடனடியாக தடுத்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இதனை கண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அமைச்சரின் காரை முற்றுகையிட்ட தம்பதிகளிடம் சென்று உங்களது பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கிறேன். உங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டித் தருகிறேன் என கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். 

இருந்தும் அந்த தம்பதியினர் ஆவேசப்பட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெங்கடேசனிடம் அமைதியாக இரு உன்னுடைய பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என தோள் மீது கை வைத்து தட்டி தடவி ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios