400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!
செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்த ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்த ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமம் உள்ளது. இங்கு 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் இருந்து வருகிறது. இக்கோவில் பொதுமக்கள் சார்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு, 13-ம் தேதி மாலை முதல்கால பூஜையும், சிறப்பு சங்கல்பமும், 14-ம் தேதி காலை 2-ம் கால யாக பூஜையும், அன்று மாலை 6 மணியளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. மூன்றாம் கால யாக பூஜையை திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜ ஆச்சார்ய ஸ்வாமிகள் தொடக்கி வைத்து அருளுரை வழங்கினார்.
இந்நிலையில், இன்று காலை பக்த ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் திருக்கல்யாண உற்சவமும், பக்த ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.