பெண் எஸ்.பிக்கு பாலியல் சீண்டல்! சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் எஸ்.பிக்கு பாலியல் சீண்டல் வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நீதிபதி புஷ்பராணி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை!
இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- திருமணமான 8 நாட்களில் புதுமாப்பிள்ளை பலி! கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் என்னை விட்டு விட்டு போயிட்டியே!
அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல், ராஜேஷ் தாஸ் உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.