கள்ளக்குறிச்சி அருகே சாலையோர புளிய மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர புளிய மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அக்கரா பாளையத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் தேவராஜ் (40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில் தேவராஜ் அவரது நண்பர்களுடன் காரில் அக்கரா பாளையத்தில் இருந்து கடலூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் கடலூரில் இருந்து அக்கரா பாளையத்துக்கு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 

காரை அவரது நண்பர் ஜெயபால் ஓட்டி வந்தார். இந்த கார் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தேவராஜ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தேவராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.