காதல் திருமணம் செய்து கொண்ட கணவர் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் மருத்துவமனை வளாகத்திலேயே மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தன் நண்பவர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடிதுடித்து உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்தில் உயிரிழந்த ரமேசுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் சரளா என்பவரை காதல்  திருமணம் செய்துகொண்டார். 

இதனையடுத்து, கணவர் உயிரிழந்த தகவலை மனைவியிடம் கூறியதும் அலறிதுடித்துள்ளார். பின்னர், கணவரின் உடலை பார்க் ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓடோடி சென்று உடலை பார்த்து சரளா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்நிலையில், திடீரென சரளா மாயமானார். உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையின் கழிவறைக்குள் சென்று பார்த்த போது துப்பட்டாவால் து’க்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.