Trichy Crime: கணவனின் தலையில் கல்லை போட்டு கொடூரக்கொலை; மனைவி, உறவினர்களை தேடும் போலீஸ்
விராலிமலை அருகே செங்கல் சூளை தொழிலாளியை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு குடுப்பத்தினருடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சுப்பிரமணி(வயது 40). இவர் விராலிமலை - கீரனூர் சாலையில் கல்குத்தான் பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவரது தனியார் செங்கல் சூளையில் தனது மனைவி இளஞ்சியம், மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர் செங்கல் சூளையில் உள்ள கொட்டகையில் தங்கி சூளையில் பணியாற்றி வந்தனர்.
ராகுல் காந்தியின் பேச்சால் இந்துகளின் மனம் புண்பட்டுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்
இந்த நிலையில், சுப்பிரமணி அவரது மனைவி இளஞ்சியம் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சூளைக்கு வந்த செங்கல் சூளை உரிமையாளர் ஆறுமுகம் அங்கு சுப்பிரமணி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் வழக்கு பதிந்து செய்து தப்பியோடிய இளஞ்சியம் மற்றும் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோரை தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் செங்கல் சூளையில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.