Asianet News TamilAsianet News Tamil

இனி நம்மை சேர்ந்து வாழவிடமாட்டார்கள்; திருச்சி அருகே கள்ளக்காதலர்கள் விபரீத முடிவு

முசிறி அருகே கள்ளக்காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் தம்பதி ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young love couple hanged death in trichy vel
Author
First Published Aug 8, 2024, 3:27 PM IST | Last Updated Aug 8, 2024, 3:27 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காட்டுப்பத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 29). ஐடிஐ முடித்துள்ள இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே, காட்டுபுத்தூர் அடுத்த சீத்தம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்

கீர்த்தனா பி.ஏ. பட்டப்படிப்பு முடித்திருந்த நிலையில் தவிட்டுபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கீர்த்தனாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. கள்ளக்காதல் விவகாரம் சிறிது சிறிதாக இருவரது வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது.

Velankanni Train : வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு போறீங்களா.? சிறப்பு ரயில் அறிவிப்பு - எப்போ தெரியுமா.?

இதற்கு இரு வீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பழக்கத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தியும், கீர்த்தனாவும் ஒன்றாக இறந்துவிடலாம் என முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் ரைஸ்மில் அருகே இருந்த மோட்டார் அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios