லாரி மீது பயங்கரமாக மோதிய வேன்.. மணப்பெண் படுகாயம்? அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்.. அப்புறம் நடந்தது என்ன?

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணப்பெண் உள்பட 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Van accident where the bride went .. The groom went home in shock

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் (52). இவரது மகள் திருமணம் மார்த்தாண்டத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணப்பெண் உள்பட 15 பேர் ஒரு வேனில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  

Van accident where the bride went .. The groom went home in shock

அப்போது, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து மதுரை நோக்கி சிமெண்டு ஏற்றிச் சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணப்பெண் ஜெயஸ்ரீ மற்றும் உறவினர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Van accident where the bride went .. The groom went home in shock

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால் முறிந்த ஓட்டுநர்  மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் முதலுதவி அளிக்கப்பட்டு திருமணத்திற்கு செல்ல மாற்று வேன் ஏற்பாடு செய்துகொண்டு கிளப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios