திருட்டு நகையில் ஒரு கிலோவை ஆட்டையை போட்டு ஏப்பம் விட்ட போலீஸ்... லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பரபரப்பு தகவல்..!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த 5.7 கிலோ தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அதில், ஒரு கிலோ நகையை போலீசார் ஆட்டையை போட்டுவிட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

trichy Lalitha Jewelery Robbery suresh Sensational information

திருச்சி லலிதா ஜூவல்லரி நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் அக்டோபர் 16-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகனின் கூட்டாளியான திருவாரூர் சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோர் அக்டோபர் 10-ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை 3 பேரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். முருகனின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

trichy Lalitha Jewelery Robbery suresh Sensational information

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கே.கே.நகர் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். 

trichy Lalitha Jewelery Robbery suresh Sensational information

அப்போது, சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- நகைக்கடையில் கொள்ளையடித்த 5.7 கிலோ தங்க நகைகளை போலீசாரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால் 4.7 கிலோ தங்கத்தை மட்டும் போலீசார் கணக்கு காண்பித்துள்ளனர். கொள்ளை நகைகளில் சிலவற்றை போலீசார் ஆட்டையை போட்டுவிட்டனர். மேலும், வேறுநகைகளை கேட்டு போலீசார் எங்களையும், எனது குடும்பத்தினரையும் துன்புறுத்தி வருகின்றனர் என கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios