அமைச்சரிடம் கெட்ட வார்த்தையில் திட்டும் வாங்கும் காவல்துறை; திருச்சி பாஜக சாடல்!!

திருச்சி காவல் துறை அதிகாரிகள் தினமும் காலையில் அமைச்சரிடம் (கே.என்.நேரு) கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குகின்றனர் என்று திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Trichy BJP accuses the minister KN Nehru of cursing the police

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில், ''தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக'' என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, '' ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ''ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு'' என்று பாடல் பாடப்பட்டு வந்தது. ஆனால் யாருக்கு விடியல் தந்தாரு என்று இன்று வரை தெரியவில்லை.

திருச்சி அமைச்சர் நடத்தும் கேர் பள்ளி, கல்லூரிகளில் தமிழை எங்கு வளர்த்தனர். மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்தி திணிப்பு என்று திமுக கூறி வருகிறது. திருச்சி கொலை நகரமாக மாறிவிட்டது. காவல் துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளன. தினமும் காலையில் காவல் துறை அதிகாரிகள் அமைச்சர் (கே.என்.நேரு) வீட்டிக்கு சென்று சுப்ரபாதம் பாடுவது போல் "கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிவிட்டு வர வேண்டியது, அசிங்கமாக இல்லை.‌.." காலையில் சென்று அமைச்சரிடம் திட்டு வாங்குவது தான் உங்கள் வேலையா...? காவல் துறையினர் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios