திகில் கிளப்பும் திருச்சி.... லலிதா ஜீவல்லரி, பஞ்சாப் வங்கியை தொடர்ந்து மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவம்..!
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அடங்குவதற்குள் பிரபல லலிதா ஜூவல்லரியில் நகைக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் பல கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிச்சென்றனர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தமிழக போலீசார் விரைந்து கைது செய்து நகையை மீட்டனர்.
இந்நிலையில், திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் தற்போது இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.