திருச்சி வங்கி கொள்ளையன் முருகனின் பகீர் வாக்குமூலம்... அதிர்ந்துபோன போலீஸ்..!
திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி சுவற்றை துளையிட்டு, 450 சவரன் நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் போலீசாருக்கு ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதிக்குள் இருவரும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி சுவற்றை துளையிட்டு, 450 சவரன் நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், சென்னை அண்ணாநகரில் பல்வேறு வீட்டை உடைத்து நூற்றுக்கணக்கான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது முருகன் தலைமையிலான கும்பல் தான். இந்த சம்பவம் தொடர்பாக தினகரன், காளிதாஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நான் மட்டும் தலைமறைவாகிவிட்டேன். அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் தொடர்ந்து என்னைத் தேடி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்ட முருகன் என்னை விட்டு விடுங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று பேரம் பேசியுள்ளார். இதனையடுத்து, திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை, சென்னையில் தற்போது பணியாற்றும் காவல் ஆய்வாளர் ஒருவரிடமும், தலைமைக் காவலர் ஒருவரிடமும், லஞ்சமாக கொடுத்ததாக, கொள்ளையன் முருகன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையன் முருகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஜோசப் ஆகிய இருவரும் வரும் ஜனவரி, 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, திருச்சி சமயபுரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் முருகனுடன் நெருங்கிய தொடர்பில் மேலும் பல அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.