Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்; 10 ஆயிரம் பேருக்கு வேலை - அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தின் மையப் பகுதியாக விழங்கும் திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

tidel park will be set up in trichy at a cost of rs 600 crore says minister thangam thennarasu
Author
First Published Apr 6, 2023, 4:58 PM IST

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொழில்துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் காரணியல் 250 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்புத்துறை சார்ந்த மின்னனுவியல் மற்றும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா சிப்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும். இதன் மூலம் ஆளல்லா விமானங்கள், விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

காதலனை கரம் பிடித்த கையோடு தமிழக ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு பெண்

இதே போன்று சேலம் மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும், தொழிற்சாலைகள் குறைவாக உள்ள தர்மபுரி மாவட்டத்தில் மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காரைக்குடி, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios