37 மணி நேரத்தை கடந்தது..! ராட்சத இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் தீவிரம்..!
பலகட்ட முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துறை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி, தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் அதனுள்ளே சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வருகிறது.
திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளான். நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் விழுந்த குழந்தையை மீட்க உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்தனர். ஆழ்துளைக்கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் மீட்பதற்காக கருவிகளை கண்டுபிடித்திருக்கும் வல்லுனர்களும் வரவழைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 70 , 80 அடி வரையில் சென்று தற்போது 100 அடியில் சிக்கியிருக்கிறது.நேற்று காலை 5.30 வரையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் அதன் பிறகு குழந்தையின் உடலில் எந்தவித அசைவும் இல்லை என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார். தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
பலகட்ட முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துறை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி, தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் அதனுள்ளே சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வருகிறது.
37 மணி நேரமாக குழந்தை சுஜித்தை மீட்க நடக்கும் போராட்டம் எந்த வித பின்னடைவும் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருந்து வருகிறது. குழந்தை பத்திரமாக வெளியே வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் Save Sujith, Pray for sujith ஹஸ்டேக்களும் பரபரப்பட்டு வருகிறது.