செல்ஃபி எடுத்த மனநோயாளிகள்... சுர்ஜித்தை புதைக்கும் போதும் கேமராவுக்கு போஸ்... காலக்கொடுமை..!

காலக் கொடுமை, எங்கே, எப்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத ஜென்மங்கள் என தலையிலடித்துக் கொள்கின்றனர். 

taken by selfie ... pose for camera while burying Surjit

சிறுவன் சுர்ஜித்தின் மரணம்  சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் அவனது உடல் நல்லடக்கம் செய்யும் சவக்குழி அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்ட காலக் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சுர்ஜித்தின் மரணம் தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.taken by selfie ... pose for camera while burying Surjit

அதனை தொடர்நது சிறுவன் சுஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சவக்குழி அருகே நின்று கொண்டிருந்தவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

taken by selfie ... pose for camera while burying Surjit

 சிலர் ஜிம்மி ஜிப் கேமரா ஷூட் செய்யும்போது போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி பார்ப்பவர்கள், காலக் கொடுமை, எங்கே, எப்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத ஜென்மங்கள் என தலையிலடித்துக் கொள்கின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios