மஞ்சம்பட்டி குழுவினரின் கருவி குழந்தை சுர்ஜித்தின் தலையை கவ்வி பிடித்தது.  இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை 70 அடி ஆழத்தில் இருந்து 80 அடி ஆழத்துக்கு சென்றது. மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஞ்சம்பட்டி குழுவினர் ஹைட்ராலிக் போன்ற கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி சுர்ஜித்தை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். அதேவேளை ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டி குழி தோண்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மஞ்சம்பட்டி குழுவினரின் கருவி குழந்தை சுர்ஜித்தின் தலையை கவ்வி பிடித்தது.  இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.பின்னர் மீட்புப்பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 70 அடி ஆழத்துக்கு குழந்தை சென்றது. இந்நிலையில் குழந்தை சிக்கி 23மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ளபெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சுர்ஜித் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.