சுஜித் மரண எதிரொலி... தமிழக அரசு அதிரடி உத்தரவு... 24 மணி நேரம் கெடு..!
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழக குடிநீர் வடிகால் வாரியம் ஆணையிட்டுட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்து மரணமடைந்ததை அடுத்து குடிநீர் வடிகால் வாரியம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், பயன்படாத ஆழ்துளை கிணறுகளையும், திறந்த வெளிக்கிணறுகளையும் 24 மணி நேரத்துக்குள் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்.
மாற்றுப்பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறுகளை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். வாரிய பொறியாளர்களுக்கு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ள 9445801245 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மழைநீர் சேமிப்பாக மாற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
twadboartn.gov.in என்ற இணையதளத்திலோ, அல்லது சமூகவலைதளப் பக்கங்களிலோ இதுகுறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆழ்துளை கிணறுகளையும், பயனற்ற திறந்தவெளி கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் தேடி மழைநீர் கட்டமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.