மதுபோதையில் சோசியல் மீடியா பிரபலம் தீக்குளிக்க முயற்சி: திருச்சியில் பரபரப்பு!

திருச்சி அருகே சோசியல் மீடியா பிரபலம், மதுபோதையில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

Social media celebrity suriya devi attempt to set ablaze

 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (வயது 28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் (21ஆம் தேதி) மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, தனது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக சூர்யாதேவி புகார் அளித்திருந்தார். அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.

மனைவியின் கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..கடைசியில் மனைவி கொடுத்த ஷாக்.!!

இந்நிலையில் தனது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் காவல்நிலையத்திற்கு வந்த சூர்யாதேவி, காவல்நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். காவல்நிலையம் முன்பு சோசியல் மீடியா பிரபலம் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios