Asianet News TamilAsianet News Tamil

"இவ்வளவு பெருசா வளந்துருக்கீங்க .. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுனா என்னவாம் "???.. - சின்ன பசங்களின் அட்வைஸ் .. காவல்துறையின் வித்தியாச முயற்சி ..

ஹெல்மெட் போடாமல் வருபவர்களை பிடித்து சின்ன பசங்களை வைத்து அறிவுரை வழங்க செய்த சம்பவத்தை காவல்துறையினர் திருச்சியில் அரங்கேற்றினர் .

small children advices to wear helmet
Author
Tamil Nadu, First Published Aug 16, 2019, 4:49 PM IST

நாடெங்கும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . தலைக்கவசம் இல்லாமல் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன . இதை தடுக்க , தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினாலும் , அதை பெரும்பாலானோர் கேட்பதாக இல்லை .

small children advices to wear helmet

இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துதுள்ளது . அதன்படி இனி தலைக்கவசம்  இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் 100 இல் இருந்து 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது .

இந்த நிலையில் தான் தலைக்கவசம் அணியும் அவசியத்தை இன்னும் நன்றாக அதை பின்பற்றாதவர்களுக்கு  உணர்த்த வேண்டும் என நினைத்த காவல்துறை ஒரு முயற்சியை கையில் எடுத்தனர் .

அதன்படி திண்டுக்கல் - திருச்சி சாலையில் தலைக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . அதில் சின்ன பசங்களை அழைத்து வந்து தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு அறிவுரை கூற வைத்தனர் . இது போன்ற குழந்தைகள் சொன்னாலாவது இனி மறக்காமல் ஹெல்மெட் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் காவல்துறை செய்திருக்கிறது .

small children advices to wear helmet

மேலும் தற்காலிகமாக ஒரு ஹெல்மெட்டை அணியச்சொல்லி வண்டியை ஓட்டிக்காட்ட வைத்தார்கள் .

சின்ன பசங்க முதற்கொண்டு இறங்கி வந்து சொல்லியாச்சு ... இனிமேலாவது மறக்காம ஹெல்மெட் போடுங்க மக்களே .........

Follow Us:
Download App:
  • android
  • ios