Asianet News TamilAsianet News Tamil

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எத்தனை லட்சம் தெரியுமா? அள்ள அள்ள குவியும், தங்கம் வெள்ளி!

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம்  மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

Samayapuram mariamman temple undiyal collection 82 lakhs tvk
Author
First Published May 22, 2024, 3:41 PM IST | Last Updated May 22, 2024, 3:41 PM IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 82 லட்சம் ரொக்கம், 2 கிலோ 207 கிராம் தங்கம், 2 கிலோ 950 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். 

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம்  மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

அப்படி கடந்த 15 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.

இதில் ரூ 82 லட்சத்து 57 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 207 கிராம் தங்கமும், 2 கிலோ 950 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு நோட்டுகள் 114ம்,  அயல் நாட்டு நாணயங்கள் 683ம் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணை   ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios