சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!

பசு, குதிரை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதன் உரிமையாளர்கள், காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுகின்றனர். பல இடங்களில் சுற்றித்திரிந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதியும், வாகனங்களுக்கு இடையே நுழைந்தும் விபத்தை ஏற்படுத்துகின்றன. 

Rs. 10,000  fine for roaming cattle on the roads..trichy corporation

சாலைகள், தெருக்களில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

திருச்சியில் பசு, குதிரை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதன் உரிமையாளர்கள், காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுகின்றனர். பல இடங்களில் சுற்றித்திரிந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதியும், வாகனங்களுக்கு இடையே நுழைந்தும் விபத்தை ஏற்படுத்துகின்றன. 

Rs. 10,000  fine for roaming cattle on the roads..trichy corporation

சில நேரம், கால்நடைகள் வாகனங்கள் மீது மோதினால், அதன் உரிமையாளர்கள் வாகன ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தது உண்டு. இதுபோன்ற விபத்து சம்பவங்கள் தொடராமல் தடுக்க, சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு  அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs. 10,000  fine for roaming cattle on the roads..trichy corporation

அவ்வாறு மூன்று நாளில் பெற்று கொள்ளாவிட்டால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை விற்று பெறப்படும் பணம் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios