Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் 5 பவுன் நகைக்காக செவிலியர் கொலை; பெண் கைது

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராதா 5 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

retired nurse murder in trichy
Author
First Published Jan 13, 2023, 3:16 PM IST

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா(70). திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பார்க்க ரஜினி சென்று இருந்தார்.

இளமை திரும்புதே; பொங்கல் விழாவில் குத்தாட்டம் போட்ட கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள்

திரும்பி வந்து வீட்டின் கதவை  தட்டிய பொழுது வீடு பூட்டப்பட்டு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவி்லலை. அதன் பின்னர் ரஜினி, தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை கொண்டு கதவை திறந்துள்ளார். அப்போது தாயார் ராதா கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து ரஜினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் என்பதும், ஆலம்பாக்கத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி காந்தி முத்தரசநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் காந்தியை பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நகைக்காக ராதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர்  கொலையாளி காந்தியை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர். பின்னர், அவரை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios