12008 தேங்காய் உடைச்சா கண்டிப்பா மழை வருமாம்...உங்க ஊர்ல ட்ரை பண்ணுங்க...
மழைக்காக அறிகுறிகள் கொஞ்சம் ஸ்ட்ராங்காகத் தெரிந்தவுடன் நமது மாண்புமிகு அமைச்சர்கள் யாகம் வளர்த்து ஸ்கோர் செய்தது போலவே வருண பகவானைக் குளிர்விக்க தமிழகம் முழுக்க ஆங்காங்கே ஜிக் ஜாக் வேலைகள் நடந்துகொண்ட்ருக்க திருச்சியில் 12008 தேங்காயை உடைத்து மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

மழை இல்லாத நேரத்தில் சிவன் - சக்தியின் புத்திரன் வேட்டைக்கொரு மகனை வடிவமைத்து களம் பாட்டும், பனிரெண்டாயிரத்து எட்டு தேங்காயும் உடைத்து வழிபடுவது கேரள வழக்கம். அதே கேரள ட்ரெண்டைக் கையிலெடுத்திருக்கிறார்கள் நம் திருச்சிக்காரர்கள். நேற்று திருச்சி முத்தரசநல்லூரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் மழைவேண்டி 12,008 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நடைபெற்றது. நம்பூதிரி ஒருவர் கையில் வாள் ஏந்தி தரையில் வடிவமைக்கப்பட்டிருந்த வேட்டைகொரு மகன் உருவத்தை வலம் வந்தபின்னர், மற்றொரு நம்பூதிரி தனது இரண்டு கைகளால் 12 ஆயிரத்து எட்டு தேங்காயை தொடர்ந்து உடைத்தார்.
இந்த கேரள ட்ரெண்டை தமிழகத்திம்ன் மற்ற ஊர் மக்களும் பின்பற்றத் தொடங்கினால் மழை வருகிறதோ இல்லையோ தென்னை வைத்த விவசாயிகள் கொஞ்சம் பிழைத்துகொள்வார்கள்.