சுர்ஜித் மீண்டு வந்து அவன் அம்மாவிடம் சேரணும்..! பிராத்தனையில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகள்..!
புதுவையில் இருக்கும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். குழந்தை சுர்ஜித் மீண்டும் அவன் தாயிடம் பத்திரமாக சேர வேண்டுமென்று அவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் தோல்வியை சந்தித்தன. இதையடுத்து ராட்சத இயந்திரங்கள் மூலமாக பள்ளம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆழ்துளை கிணறு அமைந்திருக்கும் பகுதி கடினமான பாறைகளை கொண்டிருப்பதால் இயந்திரங்களில் இருக்கும் போல்டுகள் அடுத்தடுத்து சேதமடைந்தன.
இதனால் போர்வெல் மூலமாக குழி தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பள்ளத்தில் கயிறு கட்டி தீயணைப்பு வீரர் ஒருவர் அனுப்பப்பட்டார். அவர் குறியீடு செய்து விட்டு வெளி வந்த நிலையில் போர்வெல் மூலமாக தற்போது துளையிடபட்டு வருகிறது. இதனிடையே குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிராத்தனைகள் நடந்துவருகின்றன.
நாடுமுழுவதும் இருக்கும் பல கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவைகளில் குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது.புதுவையில் இருக்கும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். குழந்தை சுர்ஜித் மீண்டும் அவன் தாயிடம் பத்திரமாக சேர வேண்டுமென்று அவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டனர்