பொங்கல் பண்டிகை; திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்ல விரும்பும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களை காவல்துறை ஆணையர் சத்யபிரியா தொடங்கி வைத்தார்.
 

pongal festival 3 temporary bus stand opened in trichy today

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு திருச்சியில் சிறப்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 3 தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள மற்றும்  திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்து மன்னார்புரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்தும், இதே போல் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு சோனா மீனா திரையரங்க பகுதியிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா கொடி அசைந்து துவக்கி வைத்தார்.

இளமை திரும்புதே; பொங்கல் விழாவில் குத்தாட்டம் போட்ட கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள்

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சியில் பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது  இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் வரும் 17ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. 

பேருந்து ஓட்டுநர்கள், நடத்தினார்கள் பயணிகளுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். தற்பொழுது அதிக அளவு கூட்டம் இருப்பதால் பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். மேலும் பொங்கல் திருநாளை யொட்டி  1500 காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

எங்கெல்லாம் விபத்து அதிகம் ஏற்படுகிறதோ அந்த பகுதிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் அதிகளவு காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளோம். இவர்கள் யாரெல்லாம் விதிமீறலில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios