ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்.. சுற்றிவளைத்த போலீசார்.. விசாரணையில் அதிர்ச்சி..!
எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்கள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏற முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்கள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி அவரை வரலாறு மன்னிக்காது என ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இதையும் படிங்க;- ஜெயக்குமார் ஒரு லூசு.. என்னை பார்த்து இப்படி சொல்றாரு.. எடப்பாடியும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? ஓபிஎஸ் ஆவேசம்..!
அப்போது, மாநாட்டின் அருகே நபர் ஒருவர் ஒரு அடி நீளமுள்ள கத்தியை துணியில் சுத்துக்கொண்டு மறைத்து கொண்டு மேடையில் ஏற முயற்சித்துள்ளார். இதைக்கண்ட மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்து பொன்மலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க;- மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்..!
அப்போது, அவர் போலீசாரிடம் கூறுகையில்;- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள சீனிவாசபேரியைச் சேர்ந்த கருத்தபாண்டி (57) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஓபிஎஸ் அணியில் விவசாய அணி தலைவராக இருந்து வருகிறார். தற்காப்புக்காகவே கத்தியைக் வைத்திருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.