திருச்சியில் பயங்கரம்..! பிறந்த 24 மணிநேரத்தில் தெருவில் வீசப்பட்ட பெண்குழந்தை..!
பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டு சாலையோரம் கிடந்தது. அரசு வழங்கும் விலையில்லா சேலையில் சுற்றப்பட்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாங்கம் உடனடியாக தூக்கி ஆசுவாசப்படுத்தினார்.
திருச்சி மாவட்டம் திருவெரும்புதூரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். அங்கிருக்கும் பாரதிதாசன் நகர் 3-வது தெருவில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலையில் இவரது வீட்டு அருகே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டுள்ளது. அதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராஜாங்கம், சத்தம் வந்த திசை நோக்கி சென்று பார்த்துள்ளார்.
அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டு சாலையோரம் கிடந்தது. அரசு வழங்கும் விலையில்லா சேலையில் சுற்றப்பட்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாங்கம் உடனடியாக தூக்கி ஆசுவாசப்படுத்தினார். பின் அக்கம்பக்கத்தினரை எழுப்பி குழந்தை தெருவோரம் கிடப்பது குறித்த தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
செல்போன் பேசி தண்டவாளத்தை கடந்த பெண்..! ரயில்மோதி உடல் துண்டு துண்டான பரிதாபம்..!
விரைந்து வந்த காவலர்கள் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை எடை குறைவாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ஈவு இரக்கமின்றி வீசி சென்றவர்களை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.