திருமணமான 3வது வாரத்தில் தாலியை கழற்றிவிட்டு புதுப்பெண் என்ன செய்தார் தெரியுமா? அதிர்ச்சியில் மணமகன்.!

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

New bride missing  in 3rd week of marriage in trichy

திருச்சி அருகே திருமணமான 3வது வாரத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி புது மணப்பெண் மாயமாகியுள்ளார். 

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் கார்த்தி (25). இவர்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

New bride missing  in 3rd week of marriage in trichy

இதனையடுத்து, கடந்த 13ம் தேதி மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். பின்னர், சாப்பிட்டு அனைவரும் தூக்கிவிட்டனர். காலை தூங்கி எழுந்து பார்த்த போது படுக்கையில் இருந்த மனைவி காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்தி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், டேபிளில் பார்த்தபோது அவருடைய மனைவி கிருஷ்ணவேணி தனது தாலியை கழட்டி வைத்து விட்டு அங்கிருந்து மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக் உடனடியாக அவருடைய செல்போன் எண்ணணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

New bride missing  in 3rd week of marriage in trichy

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கணவர் கார்த்திக் தனது மனைவி கிருஷ்ணவேணியை காணவில்லை என உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காதலனுடன் சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 3வது வாரத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios