தொழுகைகளுக்கு ஒன்று கூட கூடாது..! கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய ரமலான் நோன்பு..!

நோன்பு நோற்கும் காலங்களில் இஸ்லாமியர்கள் கூட்டுத்தொகை வைப்பது வழக்கம். இந்த வருடம் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் சிறப்பு தொழுகைகளுக்கு யாரும் கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

muslims started keeping fast for ramzan

இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஆகும். இறை வசனங்கள் இறக்கப்பட்ட சிறப்பு மிகுந்த ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பு தொடங்கும் இஸ்லாமிய மக்கள் நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் மாலை வரை கடைபிடித்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை திறப்பார்கள். 30 நாட்கள் கடைபிடிக்கப்படும் நோன்பின் இறுதி நாளில் பிறை தென்படுவதை அடிப்படையாகக்கொண்டு ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

muslims started keeping fast for ramzan

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ரமலான் நோன்பு நேற்று தொடங்கியது. வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்பட்டதை அடுத்து நேற்று முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தலைமை காஜி அறிவித்தார். இதுதொடர்பாக ஜமாத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை புனிதமிகு ரமலான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே ரமலான் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லிம்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து சிறப்பு பிரார்த்தனைகளையும் தங்களது இல்லங்களிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

muslims started keeping fast for ramzan

அதன்படி 30 நாட்களுக்கு இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கியுள்ளனர். நோன்பு நோற்கும் காலங்களில் இஸ்லாமியர்கள் கூட்டுத்தொகை வைப்பது வழக்கம். இந்த வருடம் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் சிறப்பு தொழுகைகளுக்கு யாரும் கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சியும் விநியோக்கிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios