தந்தை இறந்ததை மறைத்து கல்யாணம் பண்ணி வைத்த அண்ணன்! ஊரையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

சகோதரியின் திருமணம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என, தன்னுடைய தந்தை இறந்த துக்கத்தை மறைத்து, அண்ணன் அவருக்கு திருமணத்தை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

morning marriage evening father death in lalkudi

சகோதரியின் திருமணம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என, தன்னுடைய தந்தை இறந்த துக்கத்தை மறைத்து, அண்ணன் அவருக்கு திருமணத்தை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜகுரு என்பவருக்கும் - கனிமொழி என்கிற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்திருந்தனர். அதன் படி, இவர்களுடை திருமணம் லால்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. 

morning marriage evening father death in lalkudi

இந்நிலையில் கனிமொழியின் தந்தை, நடராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தலையில் இருந்த கட்டியின் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திருமணம் நெருங்கிய நாட்களில் இவருடைய உடல் நிலை மிகவும் மோசமானது. 

எனினும் கனிமொழியின் சகோதரர், திருமண வேலைகளில் பிஸியாக இருந்த குடும்பத்தினரிடம் கூட காட்டி இதனை வெளிக்காட்டி கொள்ளாமல், சோகத்தை மனதில் வைத்து கொண்டு, தந்தையும், திருமண வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

morning marriage evening father death in lalkudi

இந்நிலையில், தங்கையின் திருமணத்திற்கு முதல் நாள் தந்தை நடராஜன் உயிர் இழந்தார்.  இது குறித்து, ஒரு சிலரிடம் மட்டுமே கூறி, திருமணம் வரை யாரிடமும் கூற வேண்டாம் என கேட்டு கொண்டார். 

இதை தொடந்து திருமணம் நடந்து முடிந்த கையேடு, குடும்பத்தினர் ஒருவர் துக்கம் தாங்க முடியாமல் இந்த தகவலை வெளிப்படுத்தவே, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். காலையில் மிகவும் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்ட கனிமொழி, திருமண கோலத்திலேயே தன்னுடைய தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். 

morning marriage evening father death in lalkudi

திருமண வீடே... சாவு வீடாக மாறி, வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் கதறி அழுத சம்பவம் கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. அதே போல் தன்னுடைய சகோதரி திருமணம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என துக்கத்தை அடக்கி கொண்டு திருமணத்தில் கலத்து கொண்ட அண்ணனின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios