திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிராஜ்தீன் (28). பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவரும் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த மேனகா (25) என்கிற பெண்ணும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். மேனகா மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்துள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த மேனகா, காதலனை கரம் பிடிக்க முடியாது என்கிற அச்சத்தில் கடந்த 27ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தநிலையில் காதலி விஷமருந்திய தகவலறிந்து சிராஜ்தீன் அதிர்ச்சியடைந்தார். மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் காதலி விஷமருந்திய துக்கத்தில் சிராஜ்தீன் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேனகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே காதலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐ.டி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை..? கொரோனா பதற்றத்தில் இந்தியா..!