திருமணமான ஒரே ஆண்டில் விபரீத முடிவு... ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி..!

கோவையில் திருமணமான ஒரே ஆண்டில் ஒரே கயிற்றில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

kovai Husband wife suicide

கோவையில் திருமணமான ஒரே ஆண்டில் ஒரே கயிற்றில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கருமத்தம்பட்டி அருகே கணியூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். அவரது மனைவி ரஞ்சனி. இவர்களுடன் மகன் கேசவராஜ் (22). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கீர்த்திகா (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

kovai Husband wife suicide

இந்நிலையில், நேற்று காலை 11 மணி வரை வீட்டில் கேசவராஜும், கீர்த்திகாவும் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கேசவராஜின் பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு  உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கேசவராஜும், கீர்த்திகாவும் ஒரே கயிற்றினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதனை, கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

kovai Husband wife suicide

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்சனை காரணமாக கேசவராஜும், கீர்த்திகாவும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே ஆண்டில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios