87 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித்... இதுவரை 40 அடி தோண்டப்பட்டுள்ள குழி... பாறைகளால் பணிகள் தாமதம்!
இன்று காலை நிலவரப்படி 40 அடிக்குக் குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையோ 87 அடி ஆழத்தில் உள்ளது. குழந்தை ஆழ்துளைக்குள் விழுந்து 62 மணி நேரத்தைக் கடந்துவிட்ட நிலையில், என்ன நிலையில் குழந்தை இருக்கிறது என்ற பதைபதைப்பும் ஏற்பட்டுள்ளது. என்றபோதும் இடைவிடாமல் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
தமிழகத்தையே சோகத்தில் தள்ளியுள்ள குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 62 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், நம்பிக்கையுடன் மீட்பு பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் தன் வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை பயனற்ற ஆழ்துளை கிணற்றுக்குள் அக்டோபர் 25 மாலை விழுந்தது. குழந்தை விழுந்தது முதல் அந்தக் குழந்தையை மீட்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மேலிருந்து குழந்தையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தனம். இந்தப் பணிகளில் குழந்தை மேலும் ஆழத்துக்குள் சரிந்தான். இதனால், மேலிருந்து குழந்தையை மீட்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
இதற்காக ராட்ச ரிக் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்படுகிறது. ஆனால், குழி தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால், குழி தோண்டும் பணிகள் தாமதமாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி 40 அடிக்குக் குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையோ 87 அடி ஆழத்தில் உள்ளது. குழந்தை ஆழ்துளைக்குள் விழுந்து 62 மணி நேரத்தைக் கடந்துவிட்ட நிலையில், என்ன நிலையில் குழந்தை இருக்கிறது என்ற பதைபதைப்பும் ஏற்பட்டுள்ளது. என்றபோதும் இடைவிடாமல் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நிகழ்விடத்திலிருந்து பணிகளை ஒருங்கிணைத்துவருகிறார்கள். மேலும் அதிகாரிகளும் குவிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்திவருகிறார்கள்.