கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி? திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்
சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் லாரியின் டயர்களை வைத்த நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் இருந்து நாள் தோறும் திருச்சி மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி விரைவு ரயில் புறப்பட்டது. இரவு 1 மணியளவில் திருச்சியை அடுத்த லால்குடி, மேலவாளாடி பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயிலில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. மேலும் ரயிலின் 4 பெட்டிகளிலில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டதைத் தொடர்ந்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் கிடந்தது தெரிய வந்தது.
தேனியில் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு பெண் கொடூர கொலை; காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து ரயிலுக்கு அடியில் இருந்து டயர்கள் அப்புறுப்படத்தப்பட்டன. மேலும் ரயில் பெட்டிகளுக்கான மின் இணைப்பு சீரானதைத் தொடர்ந்து 30 நிமிட தாமதத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் குறித்து இருப்புப்பாதை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூரில் தாலி கட்டிய கையோடு கூலிங் கிளாசுடன் குத்தாட்டம் போட்ட புதுமண தம்பதிகள்
மேலும் ரயிலை கவிழ்க்கும் எண்ணத்தை இதுபோன்ற செயல் நிகழ்த்தப்பட்டதா? அல்லது தவறுதலாக யாரேனும் செய்துள்ளனரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.