ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது வரவேற்க தக்கது - வீரமணி

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய கூட்டணியைச் சேர்ந்த சில கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

k veeramani slams aiadmk in trichy vel

திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி, ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து ஆனால் பா.ஜ.க வினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டி  முடிக்கப்படாத கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளார்கள். இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது.

20 ஆண்டு தண்டனையா? தீர்ப்பை கேட்டு நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த போக்சோ குற்றவாளிகள்; திருச்சியில் பரபரப்ப

பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூறும் பாஜகவினர் தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பா.ஜ.கவினர் அதை கூறட்டும். இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது.

ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி திஹாருக்கு  போவார் என்று கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஜெயிலுக்கு போவார் என கூறுகிறார். ஸ்டாலின் மட்டுமே கோட்டைக்கு போவார். இரண்டு பேருமே கோட்டைக்கு செல்வேன் என கூறாமல் ஜெயிலுக்கு செல்வேன் என கூறி வருகிறார்கள்.

திருச்சியில் உறியடித்து தமிழர் திருநாளை கோலாகலமாகக் கொண்டாடிய அமைச்சர் நேரு

ஆண்டிக்கு கூட மடம் இருக்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அது கூட இல்லை. அவருக்கு இடம் எங்கும் இல்லை. எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராவது தொடர்பாக திமுக அறிவிக்கும். அவருக்கு தகுதி இருக்கா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர் முதல்வர். 

அமைச்சர்கள் நியமனத்தில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டு மூக்கு உடைபட்டு இருக்கிறார். அவருடைய பணியை சிறப்பாகவும் அடக்கமாகவும் செய்து வருகிறார். அதனால் அவர் அனைத்து தகுதிகளையும் பெற்றவர் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios