இந்தி தெரியதா? உங்களுக்கு லோன் கிடையாது... வலுக்கும் எதிர்ப்பால் தூக்கியடிக்கப்பட்ட வங்கி மேலாளர்..!
இந்தி தெரியாததால் கடன் வழங்க முடியாது என்று கூறியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தி தெரியாததால் கடன் வழங்க முடியாது என்று கூறியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, கடைசியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பாலசுப்பிரமணியன் பெற்றார். மருத்துவ துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வங்கிக் கடன் கேட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, வங்கியின் கிளை மேலாளரிடம் பாலசுப்பிரமணியன் பேசியுள்ளார். அப்போது, "உனக்கு இந்தி தெரியுமா?" என வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த வங்கி மேலாளர் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் எனக் கூறியதால், பாலசுப்பிரமணியத்திற்கு வங்கிக் கடன் வழங்க வங்கி மேலாளர் மறுத்துவிட்டதாகப் கூறினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில், இந்தி தெரியாததால் கடன் வழங்க முடியாது என்று கூறியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.