ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திபுதிபுவென நுழைந்த வருமானவரித்துறை... 10 கோடியை பறிமுதல் செய்து அதிரடி...!

நேற்று வரை மட்டும் மாநிலம் முழுவதும்  மொத்தமாக ரூ.231.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். 

Income tax department seized rs.10 crore  at thrichy real estate business man house

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா நடப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினரும் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

Income tax department seized rs.10 crore  at thrichy real estate business man house

நேற்று வரை மட்டும் மாநிலம் முழுவதும்  மொத்தமாக ரூ.231.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் மொராய்ஸ்க்கு சொந்தமான இடங்களில் ரூ.10 கோடி பறிமுதல். மொராய்ஸ் சிட்டி ரியல் எஸ்டேட் நிறுவன அதிபரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Income tax department seized rs.10 crore  at thrichy real estate business man house

சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக இருக்கும் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத சுமார் 80 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.11.5 கோடி ரூபாய் ரொக்கமும் சிக்கியது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் திருச்சியில் சோதனை நடத்திய ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நெருங்கிய நண்பர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios