தொடங்கியது பிளஸ் 2 தேர்வு..! 8¼ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்..!
இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வை 4,41,612 மாணவிகள், 3,74,747 மாணவா்கள், 62 சிறைக்கைதிகள் மற்றும் 2 திருநங்கைகள் எழுதுகின்றனர். தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் 3,012 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் 2019-2020ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இன்று முதல் மாா்ச் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8,16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா்.
இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வை 4,41,612 மாணவிகள், 3,74,747 மாணவா்கள், 62 சிறைக்கைதிகள் மற்றும் 2 திருநங்கைகள் எழுதுகின்றனர். தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் 3,012 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 41,500 ஆசிரியா்கள் தேர்வு கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்ப்பதற்காக 4,000 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளிகளில் சோதனையில் ஈடுபடுவார்கள்.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக இருந்தாலோ அல்லது ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தேர்வு துறை எச்சரித்துள்ளது. தேர்வு தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி 93854 94105, 93854 94115, 93854 94120 ஆகிய எண்களில் தேர்வு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தேவையான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்ய தயார்..! ரஜினி அதிரடி..!