Health Secretary Radhakrishnan:சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து.. யாருக்கு என்ன ஆச்சு?

புதிதாக உருவாகியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி சென்றுக்கொண்டிருந்தார். 

Health Secretary Radhakrishnan car accident in trichy

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயமின்றி அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த  ராதாகிருஷ்ணன் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவர் கொரோனா முதல் அலை 2வது கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்தினார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தார். 

Health Secretary Radhakrishnan car accident in trichy

இந்நிலையில், புதிதாக உருவாகியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி சென்றுக்கொண்டிருந்தார். 

Health Secretary Radhakrishnan car accident in trichy

அப்போது கார் திருச்சி விமான நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து, வேறொரு காரில் சுகாதாரத்துறை செயலாளர் புறப்பட்டு சென்றார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios