BREAKING: ஷாக்கிங் நியூஸ்.. திருச்சியில் 10ம் வகுப்பு பள்ளி மாணவன் அடித்துக்கொலை.. 3 மாணவர்கள் கைது..!

சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் சகமாணவர்கள் மௌலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி ஆத்திரத்தில் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

Government school student beaten to death in Trichy

திருச்சி அருகே அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்  தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மெளலீஸ்வரன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது, சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் சகமாணவர்கள் மௌலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி ஆத்திரத்தில் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

Government school student beaten to death in Trichy

இதில், மௌலீஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே அந்த மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Government school student beaten to death in Trichy

இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர்கள் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 மாணவர்களிடம் தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios