ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் முதலில் 25 அடி ஆழத்தில் இருந்ததாகவும் மேலும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது கைகளில் இருந்து குழந்தை நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டது. அதாவது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மூன்று முறை கயிறை உள்ளே செலுத்தி குழந்தையை மேல் இழுக்க முயற்சி செய்தபோது குழந்தையின் கைகள் கயிறு மூலம் கட்டப்பட்டது . ஆனால் கட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் கையில் இருந்த கயிறு குழந்தையின் கையிலிருந்து  நழுவியதால் குழந்தை 25 ஆழத்திலிருந்து 70 அடி ஆழத்திற்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து பல ஹைட்ராலிக் இயந்திரங்களையும் உள்ளே செலுத்தி மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஆனால் அவர்கள் செய்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடிக்கு சென்று விட்டது. அதனையடுத்து ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. பாறைகள் இருப்பதால் முதல் ரிக் இயந்திரம் பழுதானது. அதை விட சக்தி வாய்ந்த மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு தோண்டப்பட்ட நிலையில் அந்த இயந்திரமும் பழுதானது.

முதல் இயந்திரம் 35 அடியும், இரண்டாம் இயந்திரம் 10 அடியும் என மொத்தம் 45 அடிகள் தோண்டப்பட்ட நிலையில் தற்போது பள்ளத்தை ஆய்வு செய்ய தீயணைப்பு படையினர் இறக்கி விடப்பட்டுள்ளனர்.  அந்தப்பள்ளத்தில் ஏணி மூலம் இறங்கி பாறைத் தன்மை குறித்து ஆராய உள்ளனர். ரிக் இயந்திரங்கள் பழுதானதால் போர்வெல் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது.